சமையல் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய அம்மா மிகவும் நன்றாக சமைப்பார்கள், அவரிடம் இருந்து தென்னிந்திய உணவுகளை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன்.
திருமணத்திற்கு பிறகு தில்லியில் குடியேறிய பிறகு என் கணவரும் குழந்தைகளும் வட இந்திய உணவுகளை அதிகம் விரும்புவதை அறிந்து, புதிய உணவுகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரித்தது. தில்லியில் நான் பல மாநிலங்களைச் சேர்ந்த தோழிகளிடம் பழகியதில் பல்வேறு வட இந்திய உணவுகளைச் சமைப்பது குறித்து கற்றுக் கொண்டேன்.
இந்த புத்தகத்தில், நான் கற்றுக்கொண்ட, சமைத்த, அனைவராலும் சுலபமாக செய்யக்கூடிய வட இந்திய உணவுகள் பற்றிய எளிய குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
மிக விரைவில், ஒரு YouTube சேனல் தொடங்கி என்னுடைய சமையல் அனுபவங்களை அந்த ஊடகத்திலும் பகிரவிருக்கிறேன். இந்த பயணத்தில் உங்கள் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியம்.
இந்த புத்தகம் என் சமையல் செய்முறைகளை பகிரும் ஒரு நம்பிக்கை முயற்சியாகவும், உங்களின் சமையல் பயணத்திற்கான ஒரு சிறிய அன்பளிப்பாகவும் இருக்கும். நன்றி!
Share This eBook: